இந்துத்துவாவை விமர்சித்ததாக புகார்: கன்னட நடிகர் சேத்தன் சிறையில் அடைப்பு

1 mins read
042d0be0-c5b6-4f7f-8be1-91de89743152
-

பெங்­க­ளூரு: கன்­னட நடி­க­ரும், சமூக செயற்­பாட்­டா­ள­ரு­மான சேத்­தன் நேற்று முன்­தி­னம் தனது ட்விட்­டர்­ப­தி­வில், "இந்­துத்­துவ அர­சி­யல் என்­பது பொய்­க­ளால் கட்­ட­மைக்­கப்­பட்­டது.

'ராவ­ணனை ராமன் தோற்­க­டித்து அயோத்­திக்­குத் திரும்­பி­ய­போது இந்­திய தேசத்தை தொடங்­கி­னார்' என சாவர்க்­கர் கூறி­யது மிகப்­பெ­ரிய பொய் ஆகும்.

பாபர் மசூ­தி­யில் ராமர் பிறந்­தார் என்­ப­தும் திப்பு சுல்­தானை கொன்­ற­வர்­கள் ஊரி­க­வுடா-நஞ்­சே­க­வுடா என கூறு­வ­தும் பொய் ஆகும்.

"பொய்­க­ளால் கட்­ட­மைக்­கப்­பட்ட இந்­துத்­துவ அர­சி­யலை உண்­மை­யால் தோற்­க­டிக்க முடி­யும்," என விமர்­சித்­தி­ருந்­தார்.

இது­தொ­டர்­பாக பெங்­க­ளூ­ரின் பஜ்­ரங் தளம் அமைப்பின் நிர்­வாகி குமார் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று சேஷாத்ரி நகர் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.

அந்­தப் புகா­ரின் அடிப்­ப­டை­யில் வழக்கு பதிவு செய்த காவல்­து­றை­யி­னர், நடி­கர் சேத்­தனை உட­ன­டி­யாக கைது செய்­த­னர்.

பெங்­க­ளூரு மாந­கர அமர்வு நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட பிறகு, அவரை சிறை­யில் அடைத்­த­னர்.