புதுடெல்லி: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி நாடு முழுதும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமை தொடர்பாக 1,89,945 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய உள்துறை இணைய அமைச்சர் அஜய் குமர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையில் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா இவ்வாறு தெரிவித்தார்.
காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை வழங்கி வருவதாக அமைச்சர் அஜய் குமார் தெரிவித்தார்.


