ஆளுநர் இந்தியில் பேசியதால் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஆளுநர் இந்தியில் பேசியதால் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

1 mins read
c7b1222b-c630-45b6-9f82-56248db1110a
-

ஷில்­லாங்: மேகா­லய மாநில சட்­டப்­பே­ர­வை­யில் இந்­தி­யில் பேசிய ஆளு­ந­ரைக் கண்­டித்து எதிர்க்­கட்சி எம்­எல்­ஏக்­கள் நான்கு பேர் வெளி­ந­டப்பு செய்­த­னர்.

அம்­மா­நி­லத்­தில் ஆங்­கி­லம் அலு­வல் மொழி­யாக உள்ள நிலை­யில், நிதி­நிலை அறிக்­கைக்­கான சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தொ­ட­ரின் முதல் நாளன்று ஆளு­நர் இந்­தி­யில் உரை­யாற்­றி­னார். இதைக் கண்­டித்து மக்­க­ளின் குரல் கட்­சி­யைச் சேர்ந்த நான்கு எம்­எல்­ஏக்­கள் முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

"மேகா­லயா இந்தி பேசும் மாநி­லம் அல்ல. அசாம் மொழி எங்­கள் மீது திணிக்­கப்­பட்ட போது மொழி அடிப்­ப­டை­யில் பிரிந்த மாநி­லம்­தான் மேகா­லயா. எனவே எங்­க­ளுக்கு புரி­யும் மொழி­யில் ஆளு­நர் பேச வேண்­டும்," என்று நான்கு எம்­எல்­ஏக்­களும் தெரி­வித்­த­னர்.

இது­கு­றித்து விளக்­கம் அளித்த மாநில முதல்­வர் கன்­ராட் சங்மா, ஆளு­ந­ரால் ஆங்­கி­லத்­தில் தனது உரை­யைப் படிக்க இய­லாது என்­றும் இதன் காரணமாக அவ­ரது உரை இந்தியில் அச்­ச­டித்து வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் கூறி­னார்.