திருவனந்தபுரம்: அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை அங்கிருந்த ஊழியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது கேரளாவில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த 36 வயது பெண், அண்மையில் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவர்களும் தாதியரும் வெளியே சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி அரை மயக்கத்தில் இருந்த பெண்ணை 55 வயதான சசிதரன் என்ற மருத்துவமனை ஊழியர் சீரழித்துள்ளார். மயக்கம் தெளிந்த பின்னர் அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி சசிதரனைக் கைது செய்துள்ளது.

