ஜெயலலிதா சொத்து ஏலம்; மீண்டும் வழக்கு

ஜெயலலிதா சொத்து ஏலம்; மீண்டும் வழக்கு

1 mins read
1605d5d1-bb82-40d8-83ad-22a3cf37af3a
-

புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடக் கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சொத்துகளை ஏலம்விட வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 11ஆம் தேதி விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.