பொக்ரான்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ஏவுகணைகளை பாய்ச்சும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்து மூன்று ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுகணைகள் விண்ணில் பாதை மாறி எல்லைக்கு அப்பால் சென்று அங்கிருந்த கிராமங்களில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து நொறுங்கின.
பயிற்சியின்போது நடந்த தவறு காரணமாக இவ்வாறு நடந்துவிட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.
இவற்றில் அஜாசர் கிராமத்திற்கு அருகில் உள்ள கச்சாப் சிங் வயல்வெளியிலும் மற்றொரு ஏவுகணை சத்ய எனும் கிராமத்தின் அருகில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு இடங்களில் விழுந்த ஏவுகணைகளை இந்திய ராணுவத்தினர் மீட்டனர். மூன்றாவது ஏவுகணையைத் தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
ஏவுகணை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஏவுகணைகளின் பாகங்கள் ஜெய்சல்மார் பகுதியில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளில் விழுந்தன. படம்: இணையம்

