மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்து அதில் பயணம் செய்த மோடி

மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்து அதில் பயணம் செய்த மோடி

1 mins read
d659bded-8334-4add-9257-79f88ecf848f
-

பெங்­க­ளூர்: பெங்­க­ளூ­ரு­வில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி, அதில் ஊழி­யர்­க­ளு­டன் பய­ணம் செய்து ஆச்­ச­ரி­ய­ம­ளித்­தார்.

பெங்­க­ளூரூ கேஆர் புரம்-ஒயிட்­ஃபீல்ட் இடை­யே­யான 13.71 கிலோ மீட்­டர் தூர மெட்ரோ ரயில் பாதை ரூ.42,250 கோடி செல­வில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பாதை­யில் சாலை மார்க்­க­மாக மக்­கள் பய­ணம் செய்ய ஏறக்­கு­றைய ஒரு­மணி நேரம் ஆகும்.

ஆனால் தற்­போ­தைய மெட்ரோ சேவை­யால் கேஆர்­பு­ரம்-ஒயிட்­ஃபீல்ட் இடை­யே­யான பயண நேரம் வெறும் 24 நிமி­டங்­க­ளாக குறை­யும்.

கர்­நா­டகா மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல் விரை­வில் நடை­பெற உள்­ளது. இங்கு ஆளும் பாஜக, எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ரஸ், ஜேடி­எஸ், ஆம்­ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நில­வு­கிறது. கர்­நா­ட­கா­வில் எப்­ப­டி­யா­வது வெற்றி பெற்று ஆட்­சியைத் தக்க வைக்­கும் முனைப்­பில் பாஜக உள்­ளது.

இதற்­கி­டையே, பாஜக மூத்த தலை­வ­ராக அமித் ஷா பெங்­க­ளூ­ரு­வில் உள்ள முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்­பாவை வீடு தேடி சென்று சந்­தித்­தார்.

எடி­யூ­ரப்பா முதல்­வர் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­ட­தால், லிங்­கா­யத் சமூக மக்­கள் பாஜக மீது அதி­ருப்­தி­யில் உள்­ள­னர்.

எனவே, லிங்­கா­யத் சமூக மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெறும் நோக்­கில் கர்­நா­டகா முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்­பா­விற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் முயற்­சி­யில் மோடி­யும் அமித்­‌ஷா­வும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

பெங்­க­ளூரூ கே,ஆர்.புரம்-ஒயிட்­ஃபீல்ட் இடை­யே­யான மெட்ரோ ரயிலில் ஊழியர்களுடன் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோடி. படம்: இணையம்