செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6e34e963-672f-42ba-9b89-9d35c04f2767
-

கொரோனா பரவல்: ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நான்கு மாதங்களுக்குப் பிறகு அதிகரித்துள்ளது. நேற்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதற்கு முந்தைய நாள் இது 1,300 ஆக இருந்தது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று 1,604 பேர் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அதற்குப் பிறகு அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை நேற்று பதிவானது. அதுபோல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பத்து ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் இரு மடங்கானது

புதுடெல்லி: இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மோடி ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2014 வரை 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு நிலவரப்படி அந்த எண்ணிக்கை 660ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 2014ல் 7ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, தற்போது 22ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

காலிஸ்தான் தலைவரைத் தேடும் பணி எட்டாவது நாளாக தீவிரம்

சண்டிகர்: பஞ்சாபில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் செயல்படும் பஞ்சாப் தி வாரிஸ் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் எட்டாவது நாளாக தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் சாது வேடத்தில் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதற்கிடையே தலைமறைவாக உள்ள அம்ரித்பால் சிங் காலிஸ்தான் நாணயத்தை வடிவமைத்து அச்சிட்டது தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரி அம்னித் கவுந்தல் தெரிவித்துள்ளார். மேலும் அம்ரித் பால் தனக்கென ஒரு புலிப்படையையும் உருவாக்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.

கர்நாடகா தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சண்டிகர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றினால் போதுமானது. இவற்றில், 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்

டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.