36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்ற பிரம்மாண்ட உந்துகணை

36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்ற பிரம்மாண்ட உந்துகணை

1 mins read
9965311f-888f-4fa1-b33f-4f9a760299be
-

ஸ்ரீஹ­ரி­கோட்டா: இந்­திய விண்­வெளி ஆய்வு நிறு­வ­னம் (இஸ்ரோ) ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வின் சதீஷ் தவான் விண்­வெளி ஆய்வு மையத்­தில் இருந்து 36 தொலை­தொ­டர்பு செயற்­கை­கோள்­க­ளு­டன் எல்.வி.எம்.3-எம்.3 என்ற உந்­து­க­ணையை வெற்­றி­க­ர­மாக விண்­ணில் பாய்ச்­சி­யது.

அதிக எடையைச் சுமந்துசெல்­லும் வித­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட அந்த உந்­து­கணை, மொத்­தம் 5.6 டன் எடை­யுள்ள செயற்­கை­கோள்­களைச் சுமந்து சென்றது.

இங்­கி­லாந்­தின் 'ஒன்­வெப்' நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான செயற்­கைக்­கோள்­கள் விண்­ணுக்குக் கொண்டு செல்­லப்­பட்­டன. இஸ்ரோ பிஎஸ்­எல்வி, ஜிஎஸ்­எல்வி வகை உந்­து­க­ணை­கள் மூலம் செயற்­கைக்­கோள்­களை விண்­ணில் செலுத்தி வரு­கிறது.

வணிக நோக்­கில் செயற்­கைக்­கோள்­களை ஜிஎஸ்­எல்வி மார்க்-3 (எல்­வி­எம்-3) உந்­து­கணை மூலம் விண்­ணில் செலுத்­தும் முயற்­சியை இஸ்ரோ மேற்­கொண்டு வரு­கிறது.

இதன்­படி, முதல்­கட்­ட­மாக, ஜிஎஸ்­எல்வி மார்க்-3 உந்­து­கணை மூலம் 36 செயற்­கைக் கோள்­கள் கடந்த ஆண்டு அக்­டோ­பர் 23ஆம் தேதி வெற்­றி­க­ர­மாக விண்­ணில் செலுத்­தப்­பட்­டன.

உடன்­பாட்­டின்­படி எஞ்­சிய 36 துணைக்­கோ­ள்களும் நேற்றுக் காலை 9 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்­பப்­பட்டுவிட்­ட­தாக நேற்று இஸ்ரோ அமைப்பு தெரி­வித்தது.