காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டம்: இந்திய செய்தியாளர் வாஷிங்டனில் தாக்கப்பட்டார்

காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டம்: இந்திய செய்தியாளர் வாஷிங்டனில் தாக்கப்பட்டார்

2 mins read
9f3c9eca-c88a-4572-9fa9-d0183619edc0
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்­தில் காலிஸ்­தான் பிரி­வி­னை­வாத தலை­வர் அம்ரித்­பால் சிங்கை காவ­ல்துறை தீவிர­மாக தேடி வரு­கிறது.

அவ­ரின் ஆத­ர­வா­ளர்­கள் உள்­ளிட்ட சுமார் 200 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து பிரிட்­டன், அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, கன­டா­வில் காலிஸ்­தான் ஆத­ர­வா­ளர்­கள் அந்தந்த­ நாடு­களில் உள்ள இந்­தி­யத் தூத­ரங்­க­ளுக்கு வெளியே ஆர்ப்­பாட்­டம் நடத்துகி­றார்­கள்.

அமெ­ரிக்­கா­வின் வாஷிங்­டன் நக­ரில் இந்­திய தூத­ர­கம் முன் சனிக்­கி­ழமை போராட்­டம் நடத்­திய காலிஸ்­தா­னி­யர்­கள், இந்­தியத் தூதர், தூத­ரக பணி­யாளருக்கு மிரட்­டல் விடுத்­த­து­டன், வாஷிங்­ட­னைச் சேர்ந்த லலித் ஜா என்ற இந்த இந்­தி­யச் செய்தி­யா­ள­ரைத் தாக்­கி­ய­தா­க­வும் தெரிவிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், பிரிட்­டன், அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, கன­டா­வில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­வ­ரும் காலிஸ்­தான் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு எதி­ராக இந்­திய அரசு முழு­மூச்­சில் சட்­டத்தை அம­லாக்­கும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சீக்­கிய போராட்­ட­வா­தி­க­ளைப் பொறுத்­த­வரை பிரிட்­டன், கனடா அர­சு­கள் கடு­மை­யான அணுகு­ முறை­யைக் கடைப்­பி­டிக்­க­வில்லை என்று இந்­திய அரசு கரு­து­கிறது.

காலிஸ்­தான் ஆத­ரவு போராட்­டங்­கள் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூடிய விளை­வு­க­ளுக்கு பிரிட்­டன், கனடா அர­சு­களே பொறுப்பு ஏற்க வேண்­டிய நிலை வரும் என்­றும் இந்­தியா எச்­ச­ரித்­துள்­ளது.

லண்­டன், சான் பிரான்­சிஸ்கோ நகர்­களில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கங்­க­ளுக்­குள் போராட்­டக்­கா­ரர்­கள் நுழைந்து இருக்­கி­றார்­கள் என்­ப­தைச் சுட்­டிய இந்­தி­யா­வின் டெல்லி சிறப்பு காவல் பிரிவு அவர்­க­ளுக்கு எதி­ராக புகார் பதிந்­தது. இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்­தான் என்ற பெய­ரில் தனி நாட்டை உரு­வாக்­கும் முயற்­சி­யில் வெளி­நா­டு­வாழ் பஞ்­சா­பி­யர்­களில் சிலர் முயன்று வரு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வில் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக அம்­ரித்­பால் சிங் செயல்­பட்டு வரு­கி­றார். பஞ்­சாப்­பில் காலிஸ்­தான் தனி நாடு என்ற கோஷத்­து­டன் செயல்­படும் 'பஞ்­சாப் தி வாரிஸ்' அமைப்­பின் தலை­வர் அம்­ரித்­பால் சிங்.

சீக்­கிய மத போத­க­ரான அவர் மீது இருந்த வழக்­கு­கள் தொடர்­பாக அவரைக் கைது செய்ய காவல்­துறை முயன்­ற­போது அவர் தப்பி ஓடி­விட்­டார். அம்­ரித்­பால் சிங்­கு­டன் தொடர்பு வைத்­தி­ருந்த தம்­பதி இருவர் கைதாயினர்.

அம்­ரித்­பால் சிங்­கை கைது செய்­வ­தில் பஞ்­சாப் அரசு தீவி­ரமாக உள்ளது. இந்­தச் சூழ­லில் சீக்­கி­யர்­கள் சில­ரின் கோரிக்­கை­யான காலிஸ்­தான் இப்­போது மீண்­டும் வலுப்­பெ­றத் தொடங்கி­உள்­ளது.