புதுடெல்லி: சிறை தண்டனைப் பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8ன் உட்பிரிவான 3ஐ ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அபா.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் இன்று அதை விசாரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாயின.

