புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், வயநாடு எம்.பி. பதவியை ராகுல் இழந்துள்ளார்.
ஒரு தொகுதி காலியானால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க வேண்டும். இதன்படி, வரும் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது.


