மணல் சாப்பிடும் பசுமாட்டை வியப்புடன் பார்த்த பொதுமக்கள்

மணல் சாப்பிடும் பசுமாட்டை வியப்புடன் பார்த்த பொதுமக்கள்

1 mins read
53b2d6f2-a986-4e32-b023-f8adcbad1d0e
-

திருப்­பதி: பொது­வாக பசுக்­கள் புல், வைக்­கோல், நெகிழிப் பொருள்­கள், காகி­தங்­கள், சுவ­ரொட்­டி­கள் ஆகி­ய­வற்றை சாப்­பிடு­வது வழக்­கம். ஆனால், திருப்­ப­தி­யில் உள்ள லட்­சு­மி­பு­ரம் பகு­தி­யில் வளர்க்­கப்­பட்டு வரும் பசுமாடு ஒன்று, வீடு கட்டுவதற்­காக குவிக்கப்பட்­டி­ருந்த ஆற்று மணலைச் சாப்­பி­டு­வ­தைப் பார்த்து அங்­குள்ள மக்­கள் ஆச்­ச­ரி­ய­மும் அதிர்ச்­சி­யும் அடைந்­த­னர்.

இது­கு­றித்து நீண்டகால­மாக பசுக்­களை வளர்த்­துப் பரா­ம­ரித்து வரும் சிலர் கூறி­ய­போது, "வயது முதிர்ந்த பசுக்­கள் மணலை எப்­போ­தா­வது ஒரு­முறை சாப்­பி­டும். பசு­வின் உட­லில் தாதுச் சத்­து கள் குறை­பாடு ஏற்­பட்­டால் அத­னைச் சரி­செய்து கொள்­வ­தற்­காக அவை மணலைச் சாப்­பி­டும். இதன்மூலம் பசுக்­க­ளுக்கு பாஸ்­பரஸ், உப்பு ஆகிய சத்­து­கள் கிடைக்­கும். பசு­வைப் போலவே ஒட்­ட­கம், மான் உள்ளிட்ட விலங்குகளும் மணல் சாப்­பி­டு­வது வழக்­கம்," என்று தெரி­வித்­த­னர்.