தொழிலதிபர் அதானி குறித்து கேள்வி எழுப்பியதால் ராகுல் காந்தி பழிவாங்கப்பட்டுள்ளார்
புதுடெல்லி: எங்கள் குடும்பத்தை பிரதமர் நரேந்திர மோடி எத்தனையோ முறை அவமதித்துள்ளார். ஆனால், இனியும் நாங்கள் அமைதியாகப் போகமாட்டோம் என்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலா ளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
"தேச ஒற்றுமைக்காக ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் என் அண்ணன் ராகுல் காந்தி நடந்துள்ளார். நாட்டுக்காகத் தன் இன்னுயிரை தியாகம் செய்த பிரதமரின் மகனால் ஒருபோதும் நாட்டை அவமதிக்க முடியாது.
"ராகுல் தேர்தலில் போட்டி யிடுவதைத் தடுக்கவே அவரை தகுதிநீக்கம் செய்துள்ளனர்," என்று பிரியங்கா குற்றம்சாட்டினார்.
டெல்லியில் நடந்த சத்தியா கிரகப் போராட்டத்தில் அவர் பேசுகையில், "அண்மையில் எனது சகோதரர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் மோடியைக் கட்டிப்பிடித்து, உங்கள்மீது எங்க ளுக்கு எந்த வெறுப்பும் இல்லை. நம்மிடையே வெவ்வேறு கொள்கைகள், சித்தாந்தங்கள் இருக்கலாம். ஆனால், எங்களிடம் வெறுப்பு இல்லை," என்றார்.
"ஒரு மனிதனை எவ்வளவு அவமதிப்பீர்கள்? இதுதான் இந்த நாட்டின் பாரம்பரியமா? எங்கள் குடும்பம் இந்த நாட்டிற்காகப் போராடியதற்காக நாங்கள் வெட்கப்பட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்பா, அம்மா, சகோதரன் எனத் தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளதாக சாடிய பிரியங்கா, தன் குடும்பம் இந்தி யாவின் வளர்ச்சிக்காக ரத்தம் சிந்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொழிலதிபர் அதானி குறித்து கேள்வி எழுப்பிய ஒரே கார ணத்தால் தன் சகோதரர் ராகுல் காந்தி பழிவாங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரியங்கா, அந்தக் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் உறுப் பினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுலின் சொந்த தொகுதியான வயநாட்டில் நூற்றுக்கணக்கான இளையர்கள் கையில் தீப்பந்தத்துடன் பேரணி சென்றனர்.
பெங்களூருவிலும் இளைஞர் காங்கிரசார் தீப்பந்த ஊர்வலம் நடத்தினர்.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதானி குழுமத்தின் பங்கு விற்பனை மோசடி குறித்து கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி நாடாளு மன்றத்தில் நேற்று கறுப்பு உடை அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவையில் கறுப்பு உடையுடன் பங்கேற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நேற்று இரவு முழுவதும் அங்கேயே தங்கி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

