சாலை விபத்துகள் குறித்து ஓம் பிர்லா வேதனை

சாலை விபத்துகள் குறித்து ஓம் பிர்லா வேதனை

1 mins read
993f4746-d402-4483-9ddd-8ed73dc0516a
-

புது­டெல்லி: தலைநகர் டெல்­லி­யில் 'கார் பேரணி' நிகழ்­வைத் தொடங்கிவைத்த மக்­க­ள­வைத் தலை­வர் ஓம் பிர்லா, சாலைப் பாது­காப்­பின் முக்­கி­யத்­து­வம் குறித்து உரை­யாற்­றி­னார்.

"இந்­தி­யா­வில் ஒவ்­வொரு ஆண்­டும் சரா­ச­ரி­யாக நான்கு லட்­சம் சாலை விபத்­து­கள் நிகழ்­கின்றன. அவற்­றில் ஒன்­றரை லட்­சம் மக்­கள் உயி­ரி­ழக்கின்றனர்," என ஓம் பிர்லா வேதனை தெரி­வித்­தார்.

"விபத்­து­க­ளால் குடும்­பம், சமூ­கம், நாட்­டுக்­குப் பேரிழப்பு ஏற்­படுகிறது. இனிமேலாவது விபத்­து­கள் நிகழாமல் அதிக கவ­னம் செலுத்தவேண்­டும். மக்­கள் சாலைவிதி­களை முறையாகப் பின்­பற்ற வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.