'இரண்டரை வயது குழந்தையைக் காக்க 10 வயது சிறுவன் நரபலி'

'இரண்டரை வயது குழந்தையைக் காக்க 10 வயது சிறுவன் நரபலி'

1 mins read
a197d18e-ab9a-4231-b918-09ba4e224dfb
-

லக்னோ: நர­பலி கொடுத்­தால் இரண்­டரை வயது குழந்­தை­யின் மன­ந­லப் பிரச்­சி­னை­கள் தீர்ந்து விடும் என நினைத்த தந்தை ஒரு­வர், மந்­தி­ர­வா­தி­யின் அறி­வுரைப்­படி 10 வயது சிறு­வ­னைக் கடத்தி, நர­பலி கொடுத்­துள்ள சம்­ப­வம் உத்­த­ரப்­பி­ர­தேச மக்­க­ளிடம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­உள்­ளது.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம், பக்­ரைச் மாவட்­டத்­தில் உள்ள பர்சா கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் கிருஷ்ண வர்மா. இவ­ரது மகன் விவேக், 10. கடந்த 23ஆம் தேதிமுதல் சிறுவன் விவேக் திடீ­ரென காணா­மல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்­றோர், காவல்­நி­லை­யத்­தில் புகார் செய்­த­னர்.

சிறு­வ­னைக் காவ­லர்­கள் தேடி­வந்த நிலை­யில், அவன் அங்­குள்ள ஒரு வயல்­வெ­ளி­யில் இருந்து பிண­மாக மீட்­கப்­பட்­டான்.

நர­ப­லிக்­காக விவேக் கொலை செய்­யப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

கொல்லப்­பட்ட விவேக்­கின் உற­வி­ன­ரான அனூப் என்­ப­வர் அதே பகு­தி­யில் வசித்து வரு­கி­றார். இவ­ரது இரண்­டரை வயது ஆண் குழந்தை மன­ந­லம் குன்­றிய நிலை­யில், உடல்­நிலை சரி­யில்­லா­மல் இருந்­த­தா­கக் கூறப்­படு­கிறது.

பல இடங்­களில் சிகிச்சை அளித்­தும் குழந்­தை­யின் உடல்­நிலை தேறா­த­தால், அனூப் ஒரு மந்­தி­ர­வா­தியை அணு­கி­யுள்­ளார்.

அந்த மந்­தி­ர­வாதி நர­பலி கொடுத்­தால் குழந்­தை­யின் உடல்­ந­லம் தேறும் எனக் கூறி­யதை அடுத்து, அனூப் தனது உற­வி­ன­ரான சிந்­தா­ராம் உத­வி­யு­டன் சிறு­வன் விவேக்கை கடத்தி, தாக்கி கொலை செய்­தது காவ­லர்­க­ளின் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, அனூப், அவ­ரது உற­வி­னர் சிந்­தா­ராம், மந்­தி­ர­வாதி ஆகிய மூவ­ரை­யும் காவ­லர்­கள் கைது செய்­த­னர்.