தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் முதல் குளோனிங் கன்று 'கங்கா' பிறந்தது

1 mins read
c1b3f3be-f286-46cf-973b-1ce7bbb7b45c
-

கர்னால் (ஹரியானா): ஹரியானா மாநிலம், கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் (என்டிஆர்ஐ), அதிக அளவில் பால் தரும் 'கிர்' இன பசுங் கன்று ஒன்றை 'குளோனிங்' முறையில் உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் முதல் 'குளோ னிங்' கன்றுக்கு கங்கா எனப் பெயரிட்டுள்ளனர். 32 கிலோ எடையுடன், நல்ல உடல் ஆரோக் கியத்துடன் கங்கா இருப்பதாக என்டிஆர்ஐ தெரிவித்துள்ளது.

கிர், சாஹிவால், தார்பார்கர், ரெட்-சிந்தி போன்ற உள்நாட்டுக் கால்நடைகள் பால் உற்பத்தி, இந்திய பால் தொழில் வளர்ச்சி யில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

"ஒரு நாளைக்கு 15 லிட்டர் பால் தரும் கிர் இனத்தைச் சேர்ந்த பசுவின் கன்றுக்குட்டியை குளோனிங் செய்துள்ளோம். பால் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டு தலின்படி, குளோனிங் நுட்பத் தைப் பயன்படுத்தி அதிக பால் தரும் கறவை மாடுகளை குளோ னிங் செய்யத் தொடங்கினோம்," என்று ஜிபி பேண்ட் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் மன்மோகன் சிங் சௌகான் கூறியுள்ளார்.