வாரத்துக்கு ஒருநாள் மாடுகளுக்கும் ஓய்வளிக்கும் கிராம மக்கள்

வாரத்துக்கு ஒருநாள் மாடுகளுக்கும் ஓய்வளிக்கும் கிராம மக்கள்

1 mins read
13bff47b-5676-41b7-bba0-bcd99f191f8b
-

ஜார்க்­கண்ட்: விடு­மு­றை­யன்று மாடு­க­ளி­டம் வேலை வாங்­கு­வது பாவம் என்­கின்­ற­னர் இந்­தி­யா­வின் ஜார்க்­கண்ட் மாநி­லம், லாத்தேஹார் மாவட்­ட­வா­சி­கள்.

இந்­தி­யா­வின் ஜார்க்­கண்ட் மாநி­லத்­தைச் சேர்ந்த சில சிற்­றூர்­களில் கால்­ந­டை­க­ளுக்­கும் வாரம் ஒரு­நாள் ஓய்­வ­ளிக்­கப்­ப­டு­கிறது. ஓய்­வு­நா­ளில் பசுக்­கள், எருமை­ களிடம் பால்­கூ­டக் கறப்­பதில்லை. அன்று அவற்­றுக்கு நல்ல உண­வும் வழங்­கப்­ப­டு­கிறது.

வாரம் ஒரு­நா­ளே­னும் ஓய்­வ­ளிக்­கப்­ப­டும்­போது கால்­ந­டை­கள் நல­மா­க­வும் ஆற்­ற­லு­ட­னும் விளங்­கு­வ­தாக அவ்­வூர்­க­ளைச் சேர்ந்த முதி­ய­வர்­கள் சொல்­கின்­ற­னர்.

இந்­ந­டை­முறையை நூறாண்­டு­க­ளுக்­கும் மேலாக அப்­ப­குதி மக்­கள் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர். பழங்­குடி மக்­கள் வியா­ழக்­கி­ழ­மை­க­ளி­லும் மற்­ற­வர்­கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் கால்­ந­டை­களுக்கு ஓய்­வ­ளிப்­ப­தாக லாத்­தே­ஹார் மாவட்­டம், துரி­சாட் எனும் ஊரைச் சேர்ந்த சஞ்­சய் கஞ்சு என்­ப­வர் குறிப்­பிட்­டார்.

"எவ்­வ­ளவு அவ­ச­ர­மெ­னி­னும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் கால்­நடை­க­ளிடம் நாங்­கள் வேலை வாங்­கு­வ­தில்லை. அப்­ப­டிச் செய்­வ­தைப் பாவம் என நினைக்­கி­றோம்," என்­றார் ஹெத்-போக்ரா ஊராட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராமேஸ்­வர் சிங்.

இப்­ப­ழக்­கம் நடப்­பி­லி­ருப்­பதை மாவட்ட விலங்­கு­நல வாரிய அதி­கா­ரி­களும் உறு­திப்­ப­டுத்­தி­ய­தாக 'நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' செய்தி தெரி­விக்­கிறது. ஒரு­முறை ஓய்­வு­ நா­ளன்று ஒரு காளை­யைக் கொண்டு ஒரு விவ சாயி நிலத்தை உழு­த­போது, அது அங்­கேயே மயங்கி விழுந்து இறந்­த­தை­ அடுத்து இப்­ப­ழக்­கம் தொடங்­கி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.