கர்நாடகாவில் ேம 10ல் சட்டமன்றத் தேர்தல்

கர்நாடகாவில் ேம 10ல் சட்டமன்றத் தேர்தல்

2 mins read
127f8a6d-1f37-42bb-9a73-4fd10209c341
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக சட்­ட­மன்றத் தேர்­தல் வரும் மே 10ஆம் தேதி நடக்­கும் என்று தலைமை தேர்­தல் ஆணை­யம் நேற்று அறி­வித்­தது.

கர்­நா­டக சட்­ட­மன்றத் தேர்­தல் ஒரே கட்­ட­மாக நடை­பெற உள்­ளது. 224 சட்­ட­மன்றத் தொகுதி­களைக் கொண்ட கர்நா­ட­கா­வில் பாஜக ஆட்சி நடை­பெற்று வரு­கிறது.

நடப்பு கர்­நாடக அர­சின் பத­விக்­கா­லம் மே 24ஆம் தேதி­யு­டன் நிறை­வடைகிறது.

தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்­கல் ஏப்­ரல் 13ஆம் தேதி தொடங்கி ஏப்­ரல் 20ஆம் தேதி வரை நடக்­கும்.

வேட்­பு­மனு பரிசீலனை ஏப்­ரல் 21ஆம் தேதி­, வேட்­பு­ம­னுவைத் திரும்­பப் பெற ஏப்­ரல் 2ஆம் தேதி கடைசி நாள் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தேர்­த­லில் பதி­வாகும் வாக்­கு­கள் மே 13ஆம் தேதி எண்ணப்­பட்டு அன்றே முடி­வு­கள் அறி­விக்­கப்­படும் என்று இந்­திய தலைமைத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

தேர்­தல் தேதி அறி­விக்­கப்­படு­வ­தற்கு முன்­ன­தா­கவே கர்நா­டக அர­சி­யல் சூடு­பிடிக்கத்­ தொடங்கி­விட்­டது. ஆளும் பாஜக, ஆட்­சியைத் தக்க வைத்­துக்­கொள்ளவும் காங்­கி­ரஸ் ஆட்­சி­யைப் பிடிக்­க­வும் முயல்கின்றன.

ஜன­தா­ த­ளம்(எஸ்) கட்­சி­யும் தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், மாண்­டியா மாவட்­டம் பேவி­ன­ஹள்ளி பகுதி­யில் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு திறந்த வாக­னத்­தில் சென்று வாக்கு சேக­ரித்த காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே.சிவக்­கு­மார், அங்கு திரண்­டி­ருந்த மக்­களை நோக்கி ரூ.500 பணத்தை வீசி எறிந்­த­தா­க­வும் அவ­ற்றை மக்­கள் போட்டி போட்டு எடுத்­துச் சென்­ற­தா­க­வும் தக­வல்­கள் கூறின.

அந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொளி பெரும் பர­ப­ரப்­பைக் கிளப்பி உள்­ளது.