புதுடெல்லி: உக்ரேனில் மருத்துவம் படித்த சுமார் 18,000 இந்திய மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் இறுதி ஆண்டுத் தேர்வில் பகுதி 1, பகுதி 2 ஆகியவற்றை மேற்கொள்ள அவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தரப்படும்.
தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 2 ஆண்டு கட்டாய சுழற்சி முறையிலான பயிற்சி பெற வேண்டும் என்று அரசு தெரிவித்தது.

