நேப்பாளத்தில் அம்ரித்பால் சிங்

நேப்பாளத்தில் அம்ரித்பால் சிங்

1 mins read
fd9be66a-ba0c-491c-8fee-dc35436e8b64
-

சண்­டி­கர்: காலிஸ்­தான் பிரி­வினை­வாதத் தலை­வர் அம்­ரித்­பால் சிங் நேப்­பா­ளத்­தில் பதுங்கி இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­ததை அடுத்து இந்­திய தூத­ர­கம் சார்­பில் நேப்­பாள அர­சுக்கு கடி­தம் அனுப்­பப்­பட்டு உள்­ளது.

எல்­லை­களில் சோத­னை­களை வலுப்­ப­டுத்தி ஒத்­து­ழைக்கத் தயார் என்று நேப்­பாள அரசு இந்­தி­யா­வி­டம் உறு­தி­கூறி இருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

பஞ்­சா­ப்பைச் சேர்ந்த காலிஸ்­தான் பிரி­வி­னை­வாதத் தலைவர் அம்­ரித்பால் சிங் 'அனந்த்­புர் கல்சா ஃபவுஜ்' என்ற பெய­ரில் தீவி­ர­வாதக் குழுவை உரு­வாக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டு­வந்­தார்.

அவரைக் கைது செய்ய காவல்­துறை களத்­தில் இறங்­கி­ய­தை­யடுத்து அவர் மாயமானார்.

கடந்த 18ஆம் தேதி முதல் அம்­ரித்­பால் சிங் பல்­வேறு வேடங்­களில் சாலை, தெருக்­களில் சுற்றித் திரி­வதைக் காட்டும் காணொளி­கள் சமூக வலைத்­தளங்­களில் வெளி­யாகி வரு­கின்­றன.