உச்ச நீதிமன்றம்: அரசியலில் இருந்து மதவாதத்தை நீக்குக

உச்ச நீதிமன்றம்: அரசியலில் இருந்து மதவாதத்தை நீக்குக

2 mins read
bfe65a97-400a-442c-bef9-d05507aed611
-

புது­டெல்லி: வெறுப்பு எனும் தீய வளை­யத்­தில் இந்­திய தேசம் சிக்­கிக் கொண்­டுள்­ள­தாக உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

அர­சி­ய­லில் இருந்து மதத்தை வெளி­யேற்­று­வது மட்­டுமே இதற்­குத் தீர்­வாக அமை­யும் என்று உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் கூறி­யுள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் வெறுப்பு பேச்சு தொடர்­பாக பல்­வேறு வழக்­கு­கள் பதி­வாகி வரு­கின்­றன. இத்­த­கைய வழக்கு ஒன்றை விசா­ரித்­த­போதே உச்ச நீதி­மன்­றம் தனது கருத்தை தெரி­வித்­தது.

விசா­ர­ணை­யின்­போது நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டும் வகை­யில் சிலர் பேசி வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட மத்­திய அரசு வழக்­க­றி­ஞர் கேர­ளா­வி­லும் தமி­ழ­கத்­தி­லும் அண்­மை­யில் வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டும் பேச்சு தொடர்­பாக ஏற்­பட்ட பிரச்­சி­னை­கள் குறித்து விவ­ரித்­தார்.

இது­போன்ற சம்­ப­வங்­கள் குறித்து தாங்­களும் அறிந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட நீதி­ப­தி­கள், அர­சி­ய­லில் இருந்து மதம் அப்­பு­றப்­ப­டுத்­தப்­படும் அந்­தத் தரு­ணம் வெறுப்­புப் பேச்­சு­கள் எல்­லாம் தடை­படும் என்­ற­னர்.

"நிச்­ச­ய­மாக வெறுப்­புப் பேச்­சு­க­ளுக்­கும் மதம் மற்­றும் அர­சி­ய­லுக்­கும் தொடர்பு இருக்­கிறது. அர­சி­யல்­வா­தி­கள் மதத்தை பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர்.

"சகோ­த­ரத்­து­வம் என்ற நன்­ம­திப்­பில் வெறுப்­புப் பேச்­சுக்­கள் விரி­சல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்த வெறுப்­புப் பேச்­சுக்­களை மதம் சார்ந்த சில அமைப்­பு­கள் உரு­வாக்­கு­கின்­றன," என்று நீதி­பதி பி.வி.நாக­ரத்­னம் குறிப்­பிட்­டார். முன்­னாள் பிர­த­மர்­கள் வாஜ்­பாய், நேரு போன்­ற­வர்­கள் பேசும்­போது கிரா­மப்­புற மக்­கள் செவி­ம­டுத்­த­தா­கக் குறிப்­பிட்ட நீதி­ப­தி­கள், தற்­போது எவ்­வித ஞான­மும் இல்­லாத சிறிய அமைப்­பு­கள் எல்­லாம் வெறுப்­புப் பேச்­சுக்­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­வ­தா­கச் சாடி­னர்.

"பேச்சு சுதந்­தி­ரத்­திற்கு ஏதும் கட்­டுப்­பாடு இல்­லையா? மதி­நுட்­பம் இல்­லா­விட்­டால் இந்த தேசத்தை உல­கின் முதல் நிலை நாடாக உரு­வாக்க இய­லாது. சகிப்­பின்மை, அறி­வின்மை, கல்­வி­யின்­மை­யால் மதி­ம­யக்­கம் ஏற்­படும். இதை அகற்­று­வ­தில் நாம் முதன்மை கவ­னம் செலுத்த வேண்­டும்," என்று உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.