நாடு முழுவதும் மூவாயிரம் பேருக்கு கிருமித்தொற்று

நாடு முழுவதும் மூவாயிரம் பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
1b6575e1-5b85-48d5-b5ff-4598487e5e94
-

புது­டெல்லி: நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரும் நிலை­யில், அனைத்து மாநி­லங்­களும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது. நாடு முழு­வ­தும் இப்­பா­திப்­புக்­காக சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 13,509ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அன்­றாட தொற்று பாதிப்பு 2.7 விழுக்­கா­டா­க­வும் வாராந்­திர பாதிப்பு விகி­தம் 1.71% ஆக­வும் உள்­ளது.

தொற்று ஏற்­பட்டு குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 4.41 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 1,396 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

புதன்­கி­ழமை மட்­டும் 14 பேர் தொற்று பாதிப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அதி­க­பட்­ச­மாக கேர­ளா­வில் எட்டு பேரும் பலி­யான நிலை­யில், மகா­ராஷ்­டி­ரா­வில் மூவர், டெல்­லி­யில் இரு­வர், இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் ஒரு­வர் பலி­யா­கி­விட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு கூறி­யது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி நாட்டில் தொற்று பாதிப்பே இல்லை என்று இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை மட்டும் தலைநகர் டெல்லியில் 300 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது.