மேற்கு வங்கத்தில் மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டம்

2 mins read
b4924f7e-1c8b-4ae1-affe-d93feeda6928
-

கோல்­கத்தா: மத்­திய அர­சின் செயல்­பாட்­டைக் கண்­டித்து மேற்கு வங்க மாநி­லத்­தில் ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் இரண்டு நாள் மறி­யல் போராட்­டம் நடை­பெற்­றது.

நேற்று முன்­தி­னம் இந்­தப் போராட்­டத்தை அம்­மா­நில முதல் வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்­தார்.

அப்­போது, மேற்கு வங்க மாநி­லத்­தில் செயல்­ப­டுத்­தப்­படும் பல்­வேறு திட்­டங்­க­ளுக்­கான நிதியை மத்­திய அரசு நிறுத்தி விட்­ட­தாக அவர் குற்­றம்­சாட்­டி­னார்.

நூறு நாள் வேலைத்­திட்­டம், இந்­திரா வீட்டு வச­தித் திட்­டம், சாலை மேம்­பாட்­டுத் திட்­டங்க ளுக்­கான நிதிைய மத்­திய அரசு நிறுத்­தி­விட்­ட­தாக அவர் அண்­மை­யில் குற்­றம்­சாட்டி இருந்­தார்.

மேலும், பிற்­ப­டுத்­தப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான கல்வி உத­வித்­தொ­கையை நிறுத்தி விட்­ட­தா­க­வும் தெரி­வித்த அவர், மத்­திய அர­சைக் கண்­டித்து தொடர் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப் படும் என அறி­வித்­தி­ருந்­தார்.

அதன்­படி, கடந்த இரு நாள் களாக மாநி­லம் தழு­விய அள­வில் மறி­யல் போராட்­டங்­கள் நடை பெற்­றன. அதில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யினர் திர­ளா­கப் பங்­கேற்­ற­னர்.

தலை­ந­கர் கோல்­கத்­தா­வில் உள்ள சிவப்பு சாலை­யில் அம்­பேத் கர் சிலைக்கு முன்பு கூடி­யி­ருந்த தொண்­டர்­கள் முன்­னி­லை­யில் உரை­யாற்­றிய மம்தா, போராட் டத்­தைக் தொடங்கி வைப்­ப­தாக அறி­வித்­தார்.

"மேற்­கு­வங்க மாநி­லத்­துக்கு மட்­டும் ஏறத்­தாழ 100,000 கோடி ரூபாய் தொகையை மத்­திய அரசு இன்­னும் விடு­விக்­க­வில்லை.

இந்த ஆண்­டுக்­கான நிதி­நிலை அறிக்­கை­யி­லும் இம்­மா­நி­லத்­துக்கு நிதி முறை­யாக ஒதுக்­கப்­பட வில்லை. மேற்கு வங்க மாநி­லத்தை மத்­திய அரசு மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யு­டன் நடத்­து­கிறது," என்­றார் முதல்­வர் மம்மா.

இதற்­கி­டையே, முதல்­வர் மம்தா தேசிய கீதத்தை அவ­ம­தித்­த­தாக எழுந்­துள்ள புகார் தொடர்­பில், அவ­ருக்கு எந்­த­வித கரு­ணை­யும் காட்­டக்­கூ­டாது என மும்பை உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.