செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
7da5ffb1-de80-465f-ad19-00cb7a717580
-

ரூ.8 கோடி மதிப்பில் வரதட்சணை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமகளின் உடன் பிறந்த சகோதரர்கள் நான்கு பேர் ரூ.8 கோடி மதிப்பில் வரதட்சணை வழங்கியுள்ளனர். ரூ.2.21 கோடி ரொக்கப்பணத்துடன், ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டிராக்டர், இருசக்கர வாகனம், குடும்பம் நடத்த தேவையான இதர பொருள்களும் சீதனமாக வழங்கப்பட்டன. அந்தப் பொருள்களை நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் ஒட்டகம் பூட்டப்பட்ட வண்டிகளும் சுமந்து சென்றன. ஒரு கிலோ தங்க நகைகள், 14 கிலோ வெள்ளி பொருள்களையும் வழங்கியுள்ளனர் அந்தப் பாசமுள்ள சகோதரர்கள்.

அமித்ஷா: மோடியை வழக்கில் சிக்க வைக்க சிபிஐ அழுத்தம் கொடுத்தது

அகமதாபாத்: குஜராத் 'என்கவுன்ட்டர்' வழக்கில் பிரதமர் மோடியை சிக்கவைக்க சிபிஐ தமக்கு கடும் அழுத்தம் கொடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எனினும் அச்சமயம் பாஜக இதுகுறித்து எந்தவிதமான கூச்சலும் எழுப்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "தற்போது குற்றவியல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, ராகுல் காந்தி தனது தலைவிதிக்கு பிரதமர் நரேந்திர மோடியைக் குற்றம் சாட்டுவதை ஏற்க இயலாது," என்று அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.