நாற்காலிக்காக சக ஊழியரையே சுட்ட ஆடவர்

நாற்காலிக்காக சக ஊழியரையே சுட்ட ஆடவர்

1 mins read
c9382723-7c18-47e6-a383-5f8bea8115a7
-

குருகிராம்: அலுவலகத்தில் நாற்காலிக்காக ஏற்பட்ட சண்டையில் ஆடவர் ஒருவர் சக ஊழியரையே சுட்ட சம்பவம் ஹரியானா மாநிலம், குருகிராமில் நிகழ்ந்தது. படுகாயமுற்ற விஷால், 23, என்ற இளையர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமன் ஜங்ரா என்ற சக ஊழியருக்கும் தமக்கும் கடந்த செவ்வாய்க் கிழமை நாற்காலி தொடர்பில் வாக்குவாதம் எழுந்ததாக திரு விஷால் கூறினார். மறுநாள் புதன்கிழமை அதே பிரச்சினை வெடித்ததால் தாம் அலுவலகத்தைவிட்டு வெளியேறியதாகவும் பின்னாலிருந்து வந்த அமன் கைத்துப்பாக்கியால் தம்மைச் சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டதாகவும் திரு விஷால் காவல்துறையிடம் கூறினார். இதன் தொடர்பில் திரு விஷாலின் சகோதரர் காவல் துறையில் புகாரளித்துள்ளார். தலைமறைவாகிவிட்ட அமனைக் காவல்துறை தேடி வருகிறது.