கோவில் விபத்து: எட்டுப் பேரின் உறுப்புகள் தானம்

கோவில் விபத்து: எட்டுப் பேரின் உறுப்புகள் தானம்

1 mins read
e9c3edcf-3f82-41b6-b9d2-eb9e5c43dd94
-

இந்­தூர்: மத்­தி­யப் பிர­தேச மாநிலம், இந்­தூ­ரில் கோவி­லின் கிணறு மூடி இடிந்து விழுந்­த­தால் மாண்ட 36 பேரில் எட்­டுப் பேரின் உடற்­பா­கங்­க­ளைத் தான­மாக வழங்க அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் முன்­வந்­துள்­ள­னர்.

தங்­கள் அன்­புக்­கு­ரி­யோ­ரின் தோலை­யும் கண்­க­ளை­யும் தான­மாக வழங்க அவர்­கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்.

கடந்த வியாழக்கிழமை ராம நவமி கொண்­டாட்­டத்­தின்போது பாலேஷ்­வர் மகா­தாவ் கோவி­லில் அத்­து­யர சம்­ப­வம் தொடர்­பில் குற்­ற­வி­யல் நடு­வர் விசா­ரணை நடத்த மாநில முதல்­வர் சிவ­ராஜ் சிங் சவு­கான் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

விபத்து நிகழ்ந்த கோவி­லுக்கு நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்ட அவர், பின்­னர் காய­ம­டைந்தோர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று, அவர்­க­ளுக்கு ஆறு­தல் கூறி­னார். அப்­போது, கோவி­லுக்கு அருகே நின்­றி­ருந்த சிலர், 'முதல்­வர் ஒழிக' என்று முழக்­க­மிட்­ட­னர்.

ராணுவ வீரர்­கள் 75 பேர் உட்­பட மொத்­தம் 140 பேர் மீட்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

இத­னி­டையே, கோவில் நிர்­வா­கக் குழுத் தலை­வர்­மீ­தும் செய­லா­ளர்­மீ­தும் இந்­திய தண்­ட­னைச் சட்­டப்­பி­ரிவு 304ன்கீழ் வழக்கு பதி­யப்­பட்­டுள்­ளது.