எம்.பி. பதவி இழந்த பிறகு முதல் கூட்டத்தில் ராகுல்

எம்.பி. பதவி இழந்த பிறகு முதல் கூட்டத்தில் ராகுல்

1 mins read
b56a2873-367b-43cd-a40b-62ba4314ac6e
-

புது­டெல்லி: எம்.பி. பத­வியை இழந்த பிறகு காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரான ராகுல் காந்தி முதல்முறை­யாக கர்­நா­ட­கா­வில் நடக்­கும் பேர­ணி­யில் பங்­கேற்­கி­றார்.

"ஏப்­ரல் 9ஆம் தேதி கோலா­ரில் ராகுல் காந்தி 'ஜெய் பாரத்' பேரணி மேற்­கொள்­கி­றார். ஏப்­ரல் 11ஆம் தேதி ராகுல் காந்தி வய­நாட்­டில் பிர­சா­ரம் செய்­கி­றார். மக்­க­ளின் குர­லான அவரை ஒரு போதும் மௌன­ம­டை­யச் செய்ய முடி­யாது. அவ­ரது குரல் இன்­ன­மும் சத்­த­மாக, வலி­மை­யாக ஒலிக்­கும்," என்று டுவிட்­டர் பதி­வில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் கே.சி.வேணு­கோ­பால் தெரி­வித்­தார்.

கர்­நா­டக சட்­டப்­பே­ர­வைக்கு ஒரே கட்­ட­மாக மே 10ஆம் தேதி வாக்­குப்­ப­தி­வும் மே 13ஆம் தேதி வாக்கு எண்­ணிக்­கை­யும் நடை­பெ­றும் என்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே ராகுல் காந்­திக்கு எதி­ரான வழக்­கில் விரை­வில் மேல்­மு­றை­யீடு செய்­யப்­படும் என்று காங்­கி­ரஸ் மேலிடம் தெரி­வித்து உள்­ளது. ராகுல் காந்­திக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட அவ­தூறு வழக்­கில் சூரத் நீதி­மன்றம் அண்­மை­யில் அவ­ருக்கு 2 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதித்­தது. இதை­ய­டுத்து எம்.பி. பத­வி­யிலிருந்து அவர் தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­டார். நாடே அதிர்ச்சி அடைந்த இந்த வழக்­கில் மேல்முறை­யீடு செய்ய காங்­கி­ரஸ் கட்சி திட்­ட­மிட்டுள்­ளது. இந்நிலை­யில் பிர­த­மர் மோடி குறித்த மற்­றொரு அவ­தூறு வழக்­கில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­கும்­படி ராகுலுக்கு பாட்னா நீதி­மன்றம் உத்தரவிட்டுள்ளது.