செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
958c9444-57f3-4352-8ce4-db0abd5f743d
-

இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் குறும்பு

மும்பை: பேங்காக்கிலிருந்து மும்பை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் குறும்பில் ஈடுபட்ட சுவீடன் நாட்டைச் சேர்ந்த 60 வயது நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வியாழக்கிழமை கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனஸ்ம் என்ற அந்த ஆடவர் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர் அதே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டார். குடித்துவிட்டு பணிப்பெண்ணை அவர் முறையற்ற வகையில் தொட்டதாகக் கூறப்படுகிறது.

ஏழுமலையான் ஊதுவத்தி

அமோக விற்பனை

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களில் மூலவர்கள் மற்றும் உற்சவர்களுக்கு அணிவிக்கப்படும் மலர், மாலைகள் வீணாகாமல் இருக்க மலர்களின் இதழ்களை உலர வைத்து விதவிதமான நறுமணம் கொண்ட ஊது வத்திகளைத் தயாரித்து திருப்பதி தேவஸ்தானம் விற்று வருகிறது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் 2வது தொழிற்சாலையை தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் 2வது ஊதுவத்தி தொழிற்சாலையை தேவஸ்தான அறங்காவலர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர்.

மோடியின் கல்விச் சான்றிதழை

கேட்ட கெஜ்ரிவாலுக்கு அபராதம்

அகமதாபாத்: பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க உத்தரவிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் (சிஐசி), பிரதமர் மோடியின் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பு சான்றிதழ் விவரங்களை வழங்க பிரதமர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களின் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில், குஜராத் பல்கலைக் கழகம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி பிரேன் வைஷ்ணவ், தலைமை தகவல் ஆணை யரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும் பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்களைக் கோரி மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி ரூ.25,000 அபராதம் விதித்தார்.