பாட்னா: பீகார் மாநிலத்தின் சசராம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வெடிகுண்டு வெடித்ததில் இளையர் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் தேதி நாடெங் கும் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின்போது, பீகாரின் நாலந்தா, சசராம் ஆகிய மாவட்டங்களில் சாமிச் சிலைகள் ஊர்வலமாக வந்தன.
அப்போது, இரு தரப்பினருக்கு இடையே வகுப்புவாத வன்முறை மூண்டதில், சிலர் கல்வீசித் தாக்கியதாகவும் சில இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சற்றே தணிந் திருந்த நிலையில், மீண்டும் இப்போது குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நிலைமை கண்காணிக் கப்பட்டு வருவதுடன், கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பீகாரில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லே கரிடம் நேற்று விவரம் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வகுப்புவாத வன் முறை குறித்து கவலை தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்தடுத்து மூளும் வன்முறை சம்பவங்களால் சசராம் பகுதியில் 26 பேர், நாலந்தா பகுதியில் 80 பேர் என 106 பேரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க ஒத்து ழைக்க வேண்டும் என்றும் டுவிட்டர் பதிவு வழி பொதுமக்களை பீகார் காவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
"வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என நாலந்தா மாவட்ட நீதிபதி ஷஷாங்க் சுபாங்கர் டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.
முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தச் சம்பவங்கள் இயற்கையாக நடந்தது அல்ல என்றும் சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காக சிலர் வேண்டுமென்றே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சாடினார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதை அடுத் தடுத்து நிகழும் வன்முறைகள் சுட்டிக்காட்டுவதாக உள்ளது என பாஜக கூறியிருப்பதை நிதிஷ் குமார் நிராகரித்துள்ளார்.
சசராம், பிஹார்ஷரீப்பில் நடந்த வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வாகனங்கள், வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு பலர் காயமடைந்தனர். 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
படம்: டுவிட்டர்

