பாஜக அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் முதல்வர்கள்
புதுடெல்லி: நீதித்துறைக்கு காங் கிரஸ் கட்சி தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்க முயல்வதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட ஈராண்டு சிைறத்தண்டைனக்கு எதிராக குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செவ்வா யன்று ேமல்முைறயீடு ெசய்தார்.
இந்நிலையில், மேல்முறையீடு செய்வதற்கு ராகுல் காந்தி நேரில் செல்லவேண்டிய தேவையில்லாத நிலையில், நீதித்துறைக்கு அழுத்தம் தரும் விதத்தில் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டிருப்பதாக கிரண் ரிஜிஜு சாடியுள்ளார்.
"நீதித்துறையை அச்சுறுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் நாடகம் நடத்திக்கொண்டிருக் கின்றனர். இது கண்டிக்கத்தக்கது," என்றும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
நாட்டைவிட தங்களது ஒரு குடும்பம் மட்டுமே மேலானது என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகவும் கிரண் ரிஜிஜு சாடினார்.
முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் சிறைக்குச் சென்றபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எத்தனை பேர் அவர்களுடன் சென்றனர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக அமைச்சர்களின் இக்குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் விமர்சனம் அவர்களது மோசமான சிந்தனையை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சசி தரூர், இது சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் எனவும் டுவிட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் முதல்வர்கள் விளக்கம்
பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், "நான் என் தலைவருடன் (ராகுல் காந்தி) சென்றது எப்படி நீதித்துறைக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக ஆகும்? ராமநவமி ஊர்வலத்தில் வெடித்த கலவரங்கள் மூலம் மேற்கு வங்கத்திலும் பீகாரிலும் பாஜகவினர் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராகப் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ இதுவரை மக்களுக்கு எந்த ஒரு விளக்கமும் கூற முன்வர வில்லை,'' என குற்றம்சாட்டினார்.
"நீதித்துறைக்கு யாராலும் அழுத்தம் கொடுக்கமுடியாது. காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய தலைவர். அவரோடு நாங்கள் சென்றது அரசியல் நாடகமல்ல, காந்தியின் நேர்மை யான வழி,'' என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
மும்பை: மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த 11 மாதங்களில் மட்டும் 604 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.306 கோடி.
தங்கக் கடத்தலில் இந்தியாவின் ஆகப்பெரிய மையமாக மும்பை விமான நிலையம் திகழ்கிறது. அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் டெல்லி (374 கிலோ), சென்னை (306 கிலோ) விமான நிலையங்கள் வருகின்றன. சுங்கத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இது தெரிவிக்கப்பட்டது.
2022 ஏப்ரலுக்கும் இவ்வாண்டு பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் மும்பை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு, அதற்கு முந்திய ஆண்டில் (91 கிலோ) இருந்ததைவிட அதிகம்.
தங்கம் கடத்துவோருக்கு மும்பை பெரிய சந்தையாக விளங்குகிறது. இந்தியாவின் மற்ற பெருநகர்களான டெல்லி, கோல்கத்தா, சென்னை ஆகியவையும் தங்கக் கடத்தலின் முக்கிய மையமாகத் திகழ்கின்றன.
தங்கக் கடத்தலுக்குத் தளமாக விளங்கும் நகர்களில் இப்போது ஹையதராபாத்தும் சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அங்கு 124 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டு அங்கு 55 கிலோ தங்கம் பிடிபட்டது.
2022 அக்டோபரில் இருந்து, தங்கம் கடத்தியதற்காக மும்பையில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியா வுக்கு மொத்தம் 720 டன் தங்கம் வந்துசேர்வதாக நகைக்கடைக்காரர்கள் கூறினர். அதில் 380 டன் தங்கம் சட்டபூர்வமாக வருகிறது. அதற்கு 15% இறக்குமதி வரியும் 3% ஒருங்கிணைந்த பொருள், சேவை வரியும் விதிக்கப்படுகிறது. எஞ்சிய 340 டன் தங்கம், இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுகிறது.
அதேவேளையில், ஆண்டுதோறும் ஏறக்குறைய 900 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக உள்நாட்டு வருவாய்ச் சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

