தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிக்கிமில் திடீர் பனிச்சரிவில் சிக்கி ஏழு பயணிகள் உயிரிழப்பு

1 mins read
a9b4f651-e832-4a5f-bdd8-d949bd230214
-

சிக்­கிம்: சிக்­கிம் மாநி­லத்­தில் ஏற்­பட்ட பனிச்­ச­ரி­வில் சிக்கி 7 சுற்­றுலாப் பய­ணி­கள் உயி­ரி­ழந்தனர். பனிச்­ச­ரி­வில் சிக்கி புதை­யுண்ட 80 பேரை மீட்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

சிக்­கிம் மாநிலத் தலை­ந­கர் காங்­டாங்கை நாதுலாவுடன் இணைக்கும் ஜவகர்­லால் நேரு சாலை­யில் 15வது மைல் பகு­தி­யில் நேற்று மதியம் 12.20 மணி­ய­ள­வில் பயங்­கர பனிச்­ச­ரிவு ஏற்­ பட்­டது. இதில் 150க்கும் மேற்­பட்ட சுற்­றுலாப் பய­ணி­கள் சிக்­கி­னர்.

இத­னை­ய­டுத்து பனிச்­ச­ரி­வில் சிக்­கிய சுற்­றுலாப் பய­ணி­களை மீட்­கும் பணி­கள் நடை­பெற்­றன. தற்­போ­தைய நிலை­யில், பனிச் சரிவில் சிக்கி 5 ஆண்­கள், ஒரு பெண், ஒரு குழந்தை பலி­யா­ன­தாக தக­வல்­கள் கூறுகின்­றன.

80க்கும் மேற்­பட்­டோர் பனி­க் குவியலில் சிக்­கி­யி­ருக்­க­லாம் என அஞ்­சப்­ப­டு­கிறது என்று காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். பனி­யின்கீழ் சிக்­கிய 30 பய­ணி­கள் மீட்­கப்­பட்டு காங்­டாக்­கில் உள்ள எஸ்­டி­என்­எம் மருத்­து­வ­மனை, மத்திய மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

காவல் ஆய்வாளர் சோனம் டென்­சிங் பூட்­டியா கூறுகையில், "13வது மைல் வரை மட்­டுமே சுற்றுப் பயணிகள் செல்ல அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் கட்டாயப்படுத்தி 15வது மைல் வரை அழைத்துச் செல்ல வைத்ததாக சொல்லப்படு கிறது. இதன் காரணமாக மிகப்பெரிய பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொள்ள நேரிட்டுள்ளது," என்றார்.