கோழிக்­கறி தகராறு: மகனைக் கொன்ற தந்தை

கோழிக்­கறி தகராறு: மகனைக் கொன்ற தந்தை

1 mins read
727e9900-ca17-4ad0-a5e6-d73c9bea3eeb
-

பெங்­க­ளூரு: கோழிக்­க­றியை ருசி பார்ப்­ப­தற்­காக தர மறுத்­த­தால் ஏற்­பட்ட தக­ரா­றில் தந்தை மகனை கட்­டை­யால் அடித்து கொன்ற சம்­ப­வம் கர்நா­டக மாநி­லத்­தில் நடந்­துள்­ளது. தட்சிண கன்­னடா மாவட்­டம் சுல்­லியா தாலுகா குட்­டிகர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஷீனா. சம்­ப­வத்­தன்று கோழிக்­கறி சமைத்­து­விட்டு வெளியே சென்ற ஷீனா மீண்­டும் வீடு திரும்பிய­போது அதனை மகன் சிவ­ராம், 32, சாப்­பிட்­ட­தா­கத் தெரிகிறது. அப்­போது அவர்­களுக்­குள் தக­ராறு ஏற்­பட்­டது. ஆத்­தி­ர­ம­டைந்த ஷீனா தனது மகனை கட்டை­யால் அடித்துள்ளார். பலத்த காய­மடைந்த சிவ­ராம் உயி­ரி­ழந்­தார்.

சம்பவம் குறித்து விசா­ரணை நடத்­திய காவல்­து­றை­யி­னர், ஷீனாவை கைது செய்­த­னர். கொலை­யுண்ட சிவ­ரா­முக்கு மனைவி, இரு குழந்­தை­கள் உள்­ள­னர்.