பாஜகவில் அனில் அந்தோணி

பாஜகவில் அனில் அந்தோணி

1 mins read
d984a497-4a05-479f-ba86-e519dbea3dec
-

புது­டெல்லி: காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரும் முன்­னாள் பாது­காப்­புத் துறை அமைச்­ச­ரு­மான ஏ.கே.அந்­தோ­ணி­யின் மகன் அனில் அந்­தோணி, டெல்­லி­யில் பாஜக மூத்த தலை­ வர்­களில் ஒரு­வ­ரும் மத்­திய அமைச்­ச­ரு­மான பியூஷ் கோயல் முன்­னி­லை­யில் நேற்று பாஜ­க­வில் இணைந்­தார். சோனியா காந்­தி­யின் குடும்­பத்­துக்கு மிக­வும் நெருக்­கமா­னவ­ரா­கக் கரு­தப்­ப­டுபவர் ஏ.கே.அந்­தோணி. தனது மகன் பாஜகவில் இணைந்தது வேதனை அளிப்பதாகவும் அவரது இந்த முடிவு மிகவும் தவறானது என்றும் ஏ.கே.அந்­தோணி தெரிவித்துள்ளார்.