போர் விமானத்தில் இந்திய அதிபர்

போர் விமானத்தில் இந்திய அதிபர்

1 mins read
393eb440-bd0d-4fff-b5ee-95eb3a518a54
-

தேஜ்­பூர்: அதி­பர் திரௌ­பதி முர்மு, தமது அசாம் மாநில சுற்­றுப்­ப­ய­ணத்­தின் ஓர் அங்­க­மாக நேற்று தேஜ்­பூர் விமா­னப்­படை நிலை­யத்­துக்­குச் சென்­றார். ராணுவ உடை­யில் இருந்த அவர், இந்­திய விமா­னப் படைக்­குச் சொந்­த­மான சுகோய் 30 எம்­கேஐ ரகப் போர் விமா­னத்­தில் பய­ணம் செய்­தார்.

இரு­வர் மட்­டும் அம­ரக்­கூ­டிய அவ்­வி­மா­னத்தை கேப்­டன் நவீன்­கு­மார் திவாரி இயக்­கி­னார்.

ராணுவ பலத்தை நாட்டு மக்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­ட­வும் முப்­ப­டை­களை ஆய்வு செய்­யும் வகை­யி­லும் அதி­பர் இத்தகைய போர் விமா­னங்­களில் பய­ணம் செய்­வது இந்­தி­யா­வில் வழக்­கம்.

இத்­த­கைய பய­ணம் மேற்­கொண்ட இரண்­டா­வது பெண் அதி­பர் திரௌபதி முர்மு. சுகோய் விமா­னத்­தில் பய­ணம் செய்த முதல் பெண் அதி­பர் என்ற பெருமை முன்­னாள் அதி­பர் பிர­தீபா பாட்­டீ­லைச் சாரும்.