செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
07818092-e6ad-4124-a7c1-b107b50fd680
-

ஐந்து நாள்களுக்கு வெப்ப அலை

புதுடெல்லி: நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்கு பல்வேறு மாநிலங்களை வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 2 டிகிரி முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எட்டு மாத கர்ப்பிணி சுட்டுக்கொலை

புதுடெல்லி: எட்டு மாத கர்ப்பிணிப் பெண் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் டெல்லி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெல்லியில் உள்ள சம்யாபூர் பத்லி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரஞ்சு ஏற்கெனவே மூன்று குழந்தை களைப் பெற்றெடுத்த நிலையில், எட்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் தாய்மை அடைந்தார். கடந்த 2ஆம் தேதி அண்டை வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத் தின்போது அதிக இரைச்சலுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதையடுத்து சத்தத்தை குறைக்குமாறு அண்டை வீட்டில் வசிக்கும் ஹரிஷ் என்பவரை கேட்டுக் கொண்டார். பலமுறை ரஞ்சு இவ்வாறு அறிவுறுத்தவே, கோபமடைந்த ஹரிஷ் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து ரஞ்சுவை சுட்டுள்ளார். இதில் ரஞ்சுவின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஹரிஷை காவல்துறை கைது செய்தது.

மூன்று மாநிலங்களுக்கு அறிவுறுத்து

புதுடெல்லி: கடந்த சில நாள்களாக ஹரியானா, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, கொரானா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று அவசரகால சிகிச்சைக்கான ஒத்திகை நடைபெற்றது.

மரம் முறிந்து விழுந்து 7 பக்தர்கள் பலி

புதுடெல்லி: சமய வழிபாட்டுத் தலத்தில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் ஏழு பக்தர்கள் உயிரிழந்துவிட்டனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பரஸ் என்ற கிராமத்தில் பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது. அங்கு நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சிறப்புப் பூசையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பலத்த காற்று வீசியதில் கோவிலுக்கு அருகே உள்ள மரம் வேரோடு சாய்ந்தது. கோவில் மேற்கூரை மீது அந்த மரம் விழுந்ததில், கூரை யின் கீழ் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் சிக்கிக்கொண்ட னர். இதையடுத்து முப்பதுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.