இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த உக்ரேன்

இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த உக்ரேன்

1 mins read
0eb0f717-0f4a-4b44-99ce-a44a7e9c94d5
-

புது­டெல்லி: உக்­ரேன் வெளி­யு­றவு துணை அமைச்­சர் எமின் தபரோவா நான்கு நாள் அதி­கா­ர­பூர்வ பய­ண­மாக புது­டெல்லி வந்­த­டைந்­தார்.

இது குறித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், உக்­ரே­னுக்கு ஆத­ரவு என்ற நிலைப்­பாட்டை இந்­தியா மேற்­கொள்ள வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளார்.

"முனி­வர்­கள், மகான்­கள், குரு­மார்­கள் எனப் பல­ரைப் பெற்­றெ­டுத்த பூமி­யான இந்­தி­யா­வுக்கு வருகை தந்­த­தில் மகிழ்ச்சி. இன்றைய தினம், விஷ்­வ­கு­ரு­வாக, உல­க­ளா­விய ஆசி­ரி­ய­ரா­க­வும் நடு­வ­ரா­க­வும் இருக்க இந்தியா விரும்­பு­கிறது. உக்­ரேன் விவ­கா­ரத்­தில், இந்­தி­யா­வின் ஆத­ரவு தேவை," என்று எமின் தப­ரோவா குறிப்­பிட்­டுள்­ளார்.

ஜி20 அமைப்­புக்கு இந்­தியா தலை­மை­யேற்­றுள்­ள­தால், ஜி20 மாநாட்­டில் பங்­கேற்க உக்­ரேன் அதி­ப­ருக்கு அழைப்பு விடுக்க வேண்­டும் என அமைச்­சர் எமின் தப­ரோவா வலி­யு­றுத்­து­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும், உக்ரே­னுக்கு வரும்­படி பிர­த­மர் மோடிக்கு அவர் அழைப்பு விடுப்­பார் என்­றும் உக்­ரே­னுக்கு மனி­தா­பி­மான உத­வி­களை கூடு­த­லாக வழங்க வேண்­டும் என அவர் கோரிக்கை விடுப்­பார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.