கர்நாடகா தேர்தல்: திணறும் கட்சிகள்

2 mins read
70d5e1b8-2366-4f70-b47f-f77d1db79e71
-

பெங்­க­ளுர்: கர்­நா­டக சட்­ட­சபை தேர்­தல் எதிர்­வ­ரும் மே மாதம் 10ஆம் தேதி நடை­பெற உள்­ளது. இதற்­கான வேட்­பு­மனு தாக்­கல் நாளை தொடங்­கு­கிறது. சட்­ட­சபை தேர்­தலை எதிர்­கொள்ள ஆளும் பா.ஜனதா, காங்­கி­ரஸ், ஜன­தா­த­ளம் (எஸ்) கட்­சி­கள் கடந்த 6 மாதங்­க­ளாக தயா­ராகி வரு­கின்­றன. எனி­னும், ஆளும் பா.ஜனதா இது­வரை வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­விக்­க­வில்லை. அக்­கட்சி கடந்த சில நாள்­க­ளாக டெல்­லி­யில் வேட்­பா­ளர் பட்­டி­யல் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோ­சனை நடத்தி வரு­கிறது.

காங்­கி­ரஸ் கட்சி ஏற்­கெ­னவே 166 தொகு­தி­க­ளுக்­கும் ஜனதா தளம் (எஸ்) 93 தொகு­தி­க­ளுக்­கும் வேட்­பா­ளர்­களை அறி­வித்­து­விட்­டன. மீத­முள்ள தொகு­தி­க­ளுக்கு வேட்­பா­ளர்­களைத் தேர்வு செய்ய முடி­யா­மல் இரண்டு கட்­சி­களும் திண­று­வ­தா­கக் கூறப்

படு­கிறது. இதில் கடும் போட்டி நில­வு­வ­தால், யாருக்கு வாய்ப்பு வழங்­கு­வது என்று முடிவு எடுப் பதில் இரு கட்­சி­களும் தொடர் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

பா.ஜனதா கட்சி தற்­போது எம்.எல்.ஏக்­க­ளாக உள்­ள­வர்­களில் 15க்கும் மேற்­பட்­டோ­ருக்கு வாய்ப் பளிக்­கப் போவ­தில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது. அத­னால் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­வித்­தால் அவர்­கள் கட்­சிக்கு எதி­ராக போரா­டும் பட்­சத்­தில், அது சிக்­கலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். காங்­கி­ரஸ் கட்சி, கோலார், புலி­கேசி

நகர், சி.வி.ராமன்­ந­கர் போன்ற சில தொகுதிகளுக்கு வேட்­பா­ளர்­களைத் தேர்வு செய்ய தொடர்ந்து ஆலோ­சனை நடத்தி வரு­கிறது.

ஜனதா தளம்(எஸ்) கட்­சி­யில் ஹாசன் தொகு­தி­யில் பவானி ரேவண்­ணா­வுக்கு அவ­ரது கண­வர் ரேவண்ணா வாய்ப்­புக் கேட்டு வரு­கி­றார். இதை அவ­ரது சகோ­த­ரர், முன்­னாள் முதல்­வர் குமா­ர­சாமி, எதிர்ப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் அங்கு வேட்­பா­ளர் தேர்­வில் இழு­பறி நீடிக்­கிறது. வேட்­பு­மனு தாக்­கல் நாள் நெருங்­கும் நிலை­யில் வேட்­பா­ளர் தேர்­வில் அர­சி­யல் கட்­சி­கள் திணறி வரு­கின்­றன.