அக்னிபாத் திட்டம்: எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

1 mins read
5b1cfedb-431d-44a3-9eb9-e378b3fba3b9
-

புதுடெல்லி: ராணு­வத்­தில் அக்­னி­பாத் என்ற புதிய திட்­டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்­திய அரசு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இத்­திட்­டத்­தின் கீழ் இணை­யும் வீரர்­கள் 4 ஆண்­டு­கள் பணி­யில் இருப்­பார்­கள். திட்­டத்­தின்கீழ் சேர்க்­கப்­படும் வீரர்­கள் அக்னி வீரர்­கள் என்று அழைக்­கப்­ப­டு­வர். இத்திட்­டம் சட்­டப்­படி செல்­லு­ப­டி­யா­கும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்­ப­ளித்­தது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறை­யீட்டு மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. இந்­நி­லை­யில், இந்த மனுக்­களை விசா­ரித்த உச்ச நீதி மன்றம், மேல் முறை­யீட்டு மனுக்­களை தள்­ளு­படி செய்­துள்­ளது.