மேற்கு வங்க வன்முறை திட்டமிட்ட ஒன்று: உண்மை கண்டறியும் குழு

மேற்கு வங்க வன்முறை திட்டமிட்ட ஒன்று: உண்மை கண்டறியும் குழு

2 mins read
d894ed37-7c02-4619-9742-6922ecd9091f
-

கோல்கத்தா: ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாநகரில் ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கடைகள், காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கில் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

அங்கு அமைதி திரும்பிய நிலையில், ஷிப்பூர் பகுதியில் மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதேபோல் ஹூக்ளி மாவட்டத்திலும் கலவரச் சம்பவங்கள் நடைபெற்றன.

இதையடுத்து 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு கலவரங்கள் நடைபெற்ற பகுதிளில் ஆய்வு செய்து நேற்று முன்தினம் அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது நடந்த வன்முறை, கலவரச் சம்பவங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை.

அனைத்துச் சம்பவங்களும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளன.

கலவரத்தைத் தூண்டும் வகையில் அங்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ராம நவமி ஊர்வலங்களுக்கு சற்று முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் மக்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசினார்.

இதனால் கலவரம் ஏற்பட்டதாகத் தற்போது தெரியவந்துள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

இந்தக் கலவர வழக்குகளை தேசிய விசாரணை முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும்.

இதன்மூலம் விசாரணை நியாயமான முறையிலும், பாரபட்சமற்ற முறையிலும் நடைபெறும்.

கலவரம் நடந்த இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.