குடும்பங்களை வறுமையில் தள்ளிய மனநோய் மருத்துவம்

குடும்பங்களை வறுமையில் தள்ளிய மனநோய் மருத்துவம்

1 mins read
eca20c8b-154c-4bb5-a85c-fa1361966109
-

புது­டெல்லி: மன­நோய் சிகிச்­சைக்கு மருத்­துவ செலவு ஆவ­தால் இந்­தி­யக் குடும்­பங்­கள் சில வறு­மை­யில் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஐசி­எம்­ஆர் எனப்­படும் இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கழ­கம் நடத்­திய ஆக அண்­மைய ஆய்வு ஒன்­றில் தெரிய வந்து உள்­ளது.

மன­நிலை பாதிக்­கப்­பட்­டோ­ரைக் கொண்ட குடும்­பங்­களில் 20 விழுக்­காடு அவ்­வாறு ஏழ்­மைக்கு நிலைக்­குச் சென்­று­விட்­ட­தாக ஆய்வு தெரி­விக்­கிறது.

2018 டிசம்­பர் மாதம் 1.18 லட்­சம் குடும்­பங்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட என்­எஸ்­எஸ் எனப்­படும் தேசிய மாதிரி ஆய்­வின் அடிப்­ப­டை­யில் புதிய ஆய்வு நடத்­தப்­பட்­டது. மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் 6,679 பேரும் ஆய்­வில் உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இது­போன்ற ஆய்வு இந்­தி­யா­வில் நடத்­தப்­பட்டு இருப்­பது இதுவே முதல்­முறை. மன­நிலை பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­கான மருத்­து­வச் செலவு பன்­ம­டங்கு அதி­க­ரித்­து­விட்­ட­தும் ஆய்­வில் தெரிய வந்­தது.

அத­னால், குடும்ப சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்­கான மொத்த செல­வில் மன­நோய் சிகிச்­சைக்கு ஆகும் செலவு மட்­டும் 18.1 விழுக்­கா­டாக அதி­க­ரித்து விட்­ட­தாக ஆய்வு கண்டறிந்தது.