வெடிகுண்டு பீதி; பள்ளியில் பதற்றம்

வெடிகுண்டு பீதி; பள்ளியில் பதற்றம்

1 mins read
c59602cb-316a-4fc7-af18-bdeb65057f09
-

புதுடெல்லி: டெல்லியில் சாதிக் நகர் பகுதியில் இயங்கி வரும் 'இந்தியன் பப்ளிக் ஸ்கூல்' பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்றுக் காலை 10.45 மணியள வில் மர்ம மின்னஞ்சல் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத் தது. அதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற அதிகாரிகள், மாணவர்களையும் ஆசிரியர் களையும் வெளியேற்றிவிட்டு பள்ளிக்கூடம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் இருமுறை சோதனை நடத்தினர். பெற்றோர் பீதியில் உறைந்தனர். சோதனை முடிவில், அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது. அதன் பிறகு பதற்றம் தணிந்தது. பள்ளி மீண்டும் இயங்கியது.