ஆற்றின் கீழே மெட்ரோ ரயில்

ஆற்றின் கீழே மெட்ரோ ரயில்

1 mins read
9740a935-de1d-4f36-aba1-e7681b852461
-

கோல்கத்தாவில் முதல் முறையாக சாதனை படைத்த இந்திய ரயில்வே துறை

கோல்­கத்தா: பொது­வாக மெட்ரோ ரயில்­கள் பூமி­யின் கீழே சுரங்­கப் பாதை அமைத்­தும், உயர் மட்­டத்­தில் தடம் அமைத்­தும் செல்­வது வழக்­க­ம்.

இந்­நி­லை­யில் மேற்கு வங்­காள மாநி­லத் தலை­ந­கர் கோல்­கத்­தா­வில் இருந்து ஹவு­ரா­வுக்கு மெட்ரோ ரயில் இயக்­கு­வ­தற்­காக ஹூக்ளி ஆற்­றின் கீழே சுரங்­கப்­பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் ஓர் ஆற்­றின் கீழே சுரங்­கப்­பாதை அமைத்து மெட்ரோ ரயில் இயக்­கு­வது இதுவே முதல் முறை.

அந்த வகை­யில் கோல்­கத்தா மெட்ரோ ரயில் சேவை நேற்று முன்­தி­னம் புதிய சரித்­தி­ரம் படைத்­தது.

கோல்­கத்­தா­வின் மகா­க­ரன் மெட்ரோ ரயில் நிலை­யத்­தில் இருந்து ஹவுரா மைதான மெட்ரோ ரயில் நிலை­யம் வரை இந்தச் சுரங்­கப்­பா­தை­யில் நேற்று முன்­தி­னம் மெட்ரோ ரயில் அறி­முக ஓட்­டம் விடப்­பட்­டது.

அதில் மெட்ரோ ரயில்வே பொது மேலா­ளர் உதய்­கு­மார் ரெட்டி, அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரு­டன் மெட்ரோ ரயில் பணி­யில் ஈடுட்டு இருந்த பொறி­யா­ளர்­களும் பய­ணம் செய்­த­னர்.

இது குறித்து மெட்ரோ ரயில் அதி­காரி ஒரு­வர் கருத்­துத் தெரி­விக்­கை­யில், "கோல்­கத்தா மற்­றும் அதன் புற­ந­கர் மக்­க­ளுக்கு நவீன போக்­கு­வ­ரத்­துச் சேவையை வழங்­கு­வ­தில் இது ஒரு புரட்­சி­க­ர­மான நட­வ­டிக்கை" என பெரு­மி­தத்­து­டன் தெரி­வித்­தார்.