புதுடெல்லி: இந்தியாவில் தொலைதூரப் பயணத்துக்கு பெரும்பாலானோர் ரயில்களில் செல்வதைத்தான் விரும்புகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளும் இதையே விரும்புகின்றனர்.
ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்களில் உள்ள 'மிடில் பெர்த்' எனப்படும் நடுப்படுக்கை வசதி அல்லது 'அப்பர் பெர்த்' எனப்படும் மேல் படுக்கை ஒதுக்கப்படும்போது அவர்
களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தற்பொழுது இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு முடிவு எடுத்துள்ளது.
இனி, மாற்றுத்திறனாளி
களின் ரயில் பயணம் எளிதாகும், அவர்கள் படும் சிரமத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
விரைவு ரயில்களில் மாற்றத்திறனாளிகளுக்கு 'லோவர் பெர்த்' எனப்படும் கீழ்படுக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க ரயில்வே நிர்வாகம் தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடுப்படுக்கைகள் ஒதுக்கப்படும்.
இதுதொடர்பாக ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் ரயில்களில் படுத்து உறங்கும் பிரிவில் 2 கீழ்படுக்கை, அத்துடன் 2 நடுப் படுக்கை வசதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
மூன்றடுக்குக் குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளில் ஒரு கீழ்படுக்கை, ஒரு நடுப்படுக்கையும் அவர்களுக்கென ஒதுக்கப் பட வேண்டும்.
இதுபோல், மூன்றடுக்கு குறைந்த கட்டண குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளில் ஒரு கீழ்படுக்கையும் ஒரு நடுப்படுக்கையும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகையும் ஏற்கெனவே வழங்கப்
பட்டு வருவது இங்கு நினைவு கூரத்தக்கது.

