உள்துறை அமைச்சு: விழிப்புடன் செயல்படுக

உள்துறை அமைச்சு: விழிப்புடன் செயல்படுக

2 mins read
0e41e0a9-8d31-4c34-bcde-23f12ebecc0b
-

மத்திய, மாநில அரசாங்கங்களின் 12,000 இணையத்தளங்கள் ஊடுருவப்படலாம்

புது­டெல்லி: இந்­திய உள்­துறை அமைச்­சின் இணை­யக் குற்­றங்­கள் தொடர்­பான ஒத்­து­ழைப்பு நிலை­யம், மத்­திய, மாநில அர­சாங்­கங்­க­ளின் 12,000 இணை­யத்­த­ளங்­கள் ஊடு­ரு­வப்பட­லாம் என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இதன் தொடர்­பில் அர­சாங்க அமைப்­பு­க­ளுக்கு நிலை­யம் சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளது.

'ஹேக்­டி­விஸ்ட் இந்­தோ­னீ­சியா' எனும் குழு அந்த இணை­யத்­த­ளங்­க­ளின் பட்­டி­யலை வெளி­யிட்டு இன்­னும் சில நாள்­களில் அவற்­றின்­மீது இணை­யத் தாக்­கு­தல் நடத்­தப்­போ­வ­தாக கூறி­யி­ருப்­ப­தாக நிலை­யம் குறிப்­பிட்­டது.

இருப்­பி­னும் இந்­திய அர­சாங்க இணை­யத்­த­ளங்­கள் இத்­த­கைய மிரட்­டல்­க­ளைச் சமா­ளிக்­கும் திறன் பெற்­றி­ருப்­ப­தாக அது கூறி­யது.

'ஹேக்­டி­விஸ்ட் இந்­தோ­னீ­சியா' குழு, இந்­தி­யா­வி­லும் சில வெளி­நா­டு­க­ளி­லும் இத்­த­கைய இணை­யத்­ தாக்­கு­த­லுக்­குத் திட்­ட­மி­டு­வ­தாக புல­னாய்­வுத் தக­வல்­கள் கிடைக்­கப் பெற்­ற­தாக இணை­யக் குற்­றங்­கள் தொடர்­பான ஒத்­து­ழைப்பு நிலை­யம் சொன்­னது.

மத்­திய மின்­ன­ணு­வி­யல், தக­வல் தொழில்நுட்ப அமைச்­சிற்கு முத­லில் இந்­தத் தக­வல் கிடைத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

பெய­ரில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பது­போல அந்த ஊடு­ரு­வல் குழு இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்­த­தாக இருக்­க­வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை என்­ப­தை­யும் சீனா, உக்­ரேன் போன்ற நாடு­களும் அதன் இலக்­கு­களில் அடங்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இத்­த­கைய ஊடு­ரு­வல் குழுக்­கள் அர­சாங்க இணை­யத்தளங்­களை ஊடு­ருவி அவை செயல்­படும் வேகத்­தைக் குறைக்க முய­லும்.

சென்ற ஆண்­டு­கூட குஜ­ராத் மாநி­லத்­தில் சில இணை­யத்­த­ளங்­களை ஊடு­ருவ சிலர் முயன்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

அமைப்­பு­களோ தனி­ம­னி­தர்­களோ இணை­யத் தாக்­கு­த­லால் பாதிக்­கப்­பட்­டால் அது­கு­றித்து 'சைபர்­கி­ரைம்.கவ்.இன்' எனும் இணை­யத்­த­ளத்­தின் வாயி­லாக அர­சாங்­கத்­தி­டம் தக­வல் தெரி­விக்­கும்­படி ஆலோ­சனை கூறப்­பட்­டி­ருக்­கிறது.

இணை­யப் பாது­காப்பு, இணைய ஊடு­ரு­வல் போன்ற அம்­சங்­கள் தொடர்­பான விழிப்­பு­ணர்வு குறித்து மத்­திய, மாநில அர­சாங்க அமைப்­பு­க­ளுக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் இதன் தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் வழி­காட்­டிக் குறிப்­பு­கள் உத­வும் என்­றும் உள்­துறை அமைச்சு கூறி­யது.