சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும் இந்திய அரசியல் சாசனச் சிற்பி எனப் போற்றப்படுபவருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு ஹைதராபாத்தில் 125 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில அரசு ரூ.146.5 கோடி செலவில் இந்தச் சிலையையும் புதிய தலைமைச் செயலக அலுவலகத்தையும் அமைத்துள்ளது.
அம்பேத்கரின் 133வது பிறந்த நாளான நேற்று, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சிலையைத் திறந்து வைத்தார். படம்: இந்திய ஊடகம்

