உ.பி.யில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

உ.பி.யில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

1 mins read
1ac67a30-8adc-4cb4-8e95-44824a37f983
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநில அர­சாங்­கம், போதைப்­பொ­ருள் ஒழிப்பு தொடர்­பில் சிறப்­புக் காவல்­ப­டைப் பிரிவை அமைத்­துள்­ளது.

காவல்­துறை அதி­கா­ரி­கள் 450 பேர் அந்­தச் சிறப்­புப் பிரி­வில் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர்.

பல்­வேறு பத­வி­களில் அவர்­கள் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வர். அனு­பவம், செயல்­தி­றன் ஆகிய தகுதி­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளின் நிய­ம­னம் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

களப்­ப­ணி­யில் ஈடு­பட வேண்­டிய ஒவ்­வொரு பத­விக்­கு­மான வயது வரம்பு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

இருப்­பி­னும் அலு­வ­ல­கத்­தில் வேலை செய்ய நேரி­டும் கணக்­கா­ளர்­கள், கணி­னிப் பணி­யா­ளர்­கள் போன்ற பத­வி­க­ளுக்கு வயது வரம்பு இல்லை.

காவல்­துறை அதி­கா­ரி­கள் வழக்­க­மாக மூன்று ஆண்­டு­க­ளுக்கு இந்­தப் பிரி­வில் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வர்.

தேவை­யேற்­பட்­டால் அவர்­க­ளது பணிக்­கா­லம் அதி­க­பட்­சம் மேலும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும்.

இவ்­வாறு இரு முறை பணிக்­கா­லம் நீட்­டிக்­கப்­ப­ட­லாம்.

சிறப்­புத் தகு­தி­யு­டைய அதி­கா­ரி­கள், குறு­கிய காலத்­திற்­கும் போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வில் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வர்.

இந்­தப் பிரி­வில் நிய­மிக்­கப்­படும் அதி­கா­ரி­கள்­மீது ஏற்­கெனவே குற்­ற­வி­யல் வழக்­கு­கள் அல்­லது துறை சார்ந்த ஒழுங்கு நட­வ­டிக்­கை­களை எதிர்­கொண்­டி­ருக்­கக்­கூ­டாது.

கடந்த மூன்று ஆண்­டு­களில் போதைப்­பொ­ருள், மதுபானங்கள், ஆயுதங்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்த சம்பவங்களில் குறிப்­பி­டத்­த­குந்த பணி­ ஆற்­றிய அதி­கா­ரி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.