உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் நேற்று புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது பாலம் ஒன்று இடிந்ததில் 60க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மக்கள் அதிகமான எண்ணிக்கையில் கூடியதால் பளுவைத் தாங்க முடியாமல் அந்தப் பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
பேனி சங்கம் எனும் இடத்தில் புத்தாண்டைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு அவர்கள் கூடி இருந்தனர்.
சம்பவத்தையடுத்து காவல்துறையினரும் நிவாரணக் குழுவினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பாலம் இடிந்து விழுந்ததைக் காட்டும் படங்களும் காணொளிகளும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளன.

