இந்திய விமானப் படை பிரான்சில் பயிற்சி

இந்திய விமானப் படை பிரான்சில் பயிற்சி

1 mins read
b809bdc1-df06-486a-9d75-0eee789841bc
-

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் 'ரஃபாயல்' ஜெட் விமானங்கள் பிரான்சில்

பயிற்சி செய்யவிருக்கின்றன. அவை வெளிநாட்டில் பயிற்சி செய்வது இதுவே முதல்முறை. இரண்டு 'சி-17' ரக விமானங்கள், நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்ட இரண்டு 'ஐஎல்-78' ரக விமானங்களுடன் விமானப் படை வீரர்கள் 165 பேர் பன்னாட்டு விமானப் படைப் பயிற்சியில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 17ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு அந்தப் பயிற்சி இடம்பெறும். அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானப் படையினர் இதில் பங்குபெறுவர்.