மொசாம்பிக் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில்

மொசாம்பிக் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில்

1 mins read
a030f05b-9e02-408c-aaf1-309dc5280ba0
-

புது­டெல்லி: இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் கிழக்கு ஆப்­பி­ரிக்க நாடான மொசாம்­பிக்­கிற்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

தமது பய­ணத்­தின் ஓர் அங்­க­மாக அமைச்­சர் ஜெய்­சங்­கர் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட ரயி­லில் அங்கு பய­ணம் செய்­தார்.

அவ­ரு­டன் மொசாம்­பிக் நாட்­டுப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் மேச்­சு­வஸ் மக­லா­வும் அந்த ரயி­லில் பய­ணம் செய்­தார்.

அதைக் காட்­டும் காணொ­ளியை அமைச்­சர் ஜெய்­சங்­கர் டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டுள்­ளார்.

'ரயில் இந்­தியா' தொழில்­நுட்ப, பொரு­ளி­யல் சேவை எனும் உள்­கட்­ட­மைப்பு நிறு­வ­னத்­தின் முதன்மை நிர்­வாக இயக்­கு­நர் ராகுல் மிட்டல் தங்­க­ளு­டன் அப்­ப­ய­ணத்­தில் இணைந்து கொண்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

அந்த ரயில் பய­ணத்­தின்­போது செய்­தி­யா­ளர் கூட்­டம் நடத்­தப்­பட்­டது. அது தொடர்­பான காணொ­ளிப் பகு­தி­யை­யும் அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

ஓடும் ரயி­லில் செய்­தி­யா­ளர் கூட்­டம் நடத்­தி­யது புது­மை­யான அனு­ப­வ­மாக இருந்­தது என்று அவர் குறிப்­பிட்­டார்.

மொசாம்­பிக் நாட்டு வெளி­யு­ற­வுத் துணை­ய­மைச்­சர் உள்­ளிட்ட பல்­வேறு தலை­வர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­ய­தா­க­வும் பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்­தல், பேர­ழி­வி­ல் இருந்து மீண்­டு­வ­ரு­தல், பசுமை வளர்ச்சி உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய­தா­க­வும் திரு ஜெய்­சங்­கர் தெரி­வித்­தார்.

மொசாம்­பிக் நாட்­டில் நீடித்த நிலைத்­தன்மை தொடர்­பான மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்கு இந்­தி­யா­வின் ஆத­ர­வைத் தாம் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­ய­தாக அவர் குறிப்­பிட்­டர்.